தமிழகத்திற்கு சுற்றுலா வந்த அமெரிக்கர்கள்..சுடுகாட்டை பார்த்து வியப்படைந்தனர்: ஏன் தெரியுமா?
தமிழகத்திற்கு சுற்றுலா வந்த அமெரிக்க பயணிகள் சுடுகாட்டில் செய்யப்படும் சடங்குகளைப் பார்த்து வியப்படைந்தனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்கு சுற்றுலா செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்கும் அவர்கள், அது தொடர்பாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் தமிழகத்தில் உள்ள மதுரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மீனாட்சி அம்மன் கோவில் என பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், திடீரென்று தத்தனேரியில் இருக்கும் சுடுகாட்டிற்குள் நுழைந்தனர்.
சுடுகாட்டிற்குள் நுழைந்த அவர்கள் எரிந்து கொண்டிருக்கும் சடலங்களையும், உடலை எரியூட்டுவதற்கு முன்பு நடக்கும் சடங்குகளையும் கண்டு வியப்படைந்தவாறு, தங்களுக்கு விளக்கம் அளிக்க உடன் வந்த ரெபக்கா என்பவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதை எல்லாம் கண்ட அவர்கள் உடனடியாக புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினர்.
இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், தமிழர்கள் பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் தற்போது தான் முதல்முறையாக பார்க்கிறோம்.
குறிப்பாக இறந்த பின்பு ஏராளமான சடங்குகள் இருக்கிறது என்பதை முதல்முறையாக பார்த்து வியப்படைந்தோம் என்று கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்