Header Ads

இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்: பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்




பட்டப் பகலில் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்: பதற வைக்கும் வீடியோ, அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த திங்கட் கிழமை ஷங்கராஷ் சேனா அமைப்பின் மாநில தலைவரான விபின் ஷர்மா மர்ம நபர்களால் பட்ட பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்நிலையில் அருகிலிருந்த கண்காணிப்பு கெமராவில் பதற வைக்கும் இந்த முழு கொலை சம்பவமும் பதிவாகியுள்ளது.

அமிர்தசரஸின் பாரத் நகர் பகுதியில் இருக்கும் ஒரு சந்தையில் தனது நண்பருடன் விபின் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் அவரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். முதல் குண்டு தன் மீது பட்டவுடன் தரையில் விழுந்த நிலையில் இருந்த விபின் ஷர்மாவை சரமாரியாக இருவரும் பலமுறை சுட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

14 குண்டுகள் தன் மீது பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே விபின் உயிர் இழந்துள்ளார். இந்தப் பயங்கர கொலை சம்பவம் அருகிலிருந்த கடையின் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.