Header Ads

வாஷிங்டன்னை தூள், தூளாக்க வடகொரியாவின் புதிய திட்டம்.. அதிர்ந்துபோன டிரம்ப்!

வடகொரியா தற்போது வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வகையில் நவீன முறையில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.


இருப்பினும் அத்தனை எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாடு கடந்த வருடம் நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையால் உலகமே அதிர்ந்தது.

இதனால் அச்சுறுத்தும் விதமாக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் அனுப்பப்பட்டது. இதற்கு அஞ்சிய பாடில்லை வடகொரியா.

இதனிடையே போர்பதற்றம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரியா கிம் ஜாங் உன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது கேஎன் 20 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா உருவாகியுள்ளது. இந்த ஏவுகணையானது வாஷிங்டன் வரைக்கும் சென்று தாக்கும் வல்லமை உடையது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது வெற்றிகரமான சோதனை செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.