திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் மாறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது, உலக அழகி மனுஷி சில்லர்..
வட மாநிலங்களில் திருமண விழாவின் போது கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியடையும் கலாச்சாரம் நிலவி வருகிறது. இத்தகைய கொண்டாட்டத்தின் போது தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் மற்றவர்கள் மீது பட்டும் உயிர் இழக்கும் நிகழ்வுகளும் நடந்து உள்ளது. இதனால் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
சமீபத்தில் பஞ்சாப் மாகாணத்தில் திருமண நிகழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய போது எதிர்பாராத விதமாக 8 வயது சிறுவன் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவில் நடந்த உலக அழகி போடியில் உலக அழகியாக தேர்ந்து எடுக்கபட்ட அரியானாவை சேர்ந்த மனுஷி சில்லர் செய்தியார்களிடம் கூறியதாவது:
திருமண விழாவின் போது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. இது தற்போது மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உலக அழகியாக முடிசூட்ட பின்னரும் உலக அழகியாகவோ , மருத்துவராகவோ என்னுடைய நோக்கம் என்பது ஒன்றே. அது அனைவருக்கும் சிறந்த ஒன்றாக இந்த உலகை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்