Header Ads

மழையால் இடிந்து விழுந்த, செம்மொழிப் பூங்கா..!

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் செம்மொழி பூங்காவின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவின் வலது பக்க சுவர் மழையில் நனைந்து வெடிப்பு ஏற்பட்டிருந்தது. இன்று காலை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம்  அடைந்தன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.