யாழ் மீசாலையில், பெண்ணிற்கு நடந்த பயங்கரம்..!
வயதான பெண்ணிடம் முகவரி கேட்பது போன்று பாசாங்கு செய்த இருவர் பெண்ணைத் தள்ளி விழுத்திவிட்டுச் சங்கிலியை அறுத்துத் தப்பியோடினர். இந்தச் சம்பவம் நேற்று மீசாலை மேற்கில் நடந்துள்ளது.
63 வயதான பெண் ஒருவர் சைக்கிளில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முகவரி யொன்றை விசாரித் துள்ளனர்.
திடீரென பெண்ணைத் தள்ளி விழுத்திவிட்டு கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடினர் என்று தெரிவிக்கப்பட்டது.
கீழே விழுந்ததில் பெண்ணுக்குத் தலையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவ மனையில் சேர்க்க ப்பட்டார். சாவக ச்சேரிப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்