Header Ads

சூரியனின் மேற்பரப்பில் புதிய துளைகள், சூரியகாற்று வெளியேற்றம், நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

சூரியனை ஆராய்வதற்கான அனுப்பபட்ட   நாசாவின் ஸோலார் டைனமிக் அப்ஸர்வேட்டரி என்னும் விண்கலத்திலிருக்கும் ஹெலியோஸீஸ்மிக் அண்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா இதனை  ஜனவரி 2015 படம் பிடித்து அனுப்பியது.

சூரியனின்  தென் துருவ பகுதியில்  கோரோணல் எனப்படும் 2 மிகப்பெரிய துளைகள் உள்ளன.  இதில் ஒரு துளை சூரியன் மேற்பரப்பில் 142 மில்லியன் மைல் பிடித்து உள்ளது 6 முதல் 8 சதவீதமாகும். இந்த ஒரு பெரிய ஓட்டையை விஞ்ஞானிகள் பல சதாபதங்களாக கண்காணித்து வருகின்றனர். சிறிய சைஸ் துளையானது  துருவத்தின் எதிர்முனையை நோக்கி உள்ளது. துளை  நீண்டதும் குறுகியதுமாக உள்ளது. அது சூரியனின் மேற்பரப்பில் 3.8 மில்லியன்  சதுர மைலை இடம் பிடித்து உள்ளது. இது சூரியனின் மேற்பரப்பில் 0.16 சதவீமாகும்.  கோரோணல் எனப்படும் துளைகள்  சூரிய  மேற்பரப்பில் குறைந்த அடர்த்தி மற்றும் வெப்பநிலை உள்ள பகுதிகளில் உள்ளன. துருவ ஒளி வட்ட துளைகள் ஐந்து ஆண்டுகள் அல்லது நீண்ட காலமாக காணப்படும். இந்த துளைகள் மாறி கோண்டே இருக்கும் தன்மை கொண்டது. இந்த கோரோணல் துளை பகுதியில் இருந்து தான் காந்த புலம் விண்வெளிக்கு செல்கிறது.

இதே போன்று  நாசா’வின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் கடந்த 8-ந்தேதி சூரியனின் மேற்பரப்பை போட்டோ எடுத்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது அந்த புற ஊதா படத்தில் கருப்பாக மிகப்பெரிய  ஓட்டை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அடர்த்தி குறைந்த இந்த ஓட்டை வழியாக சூரிய வெப்பக்காற்று அதிவேகத்தில் வெளியேறுகிறது. இது சூரியன் மூச்சு விடுவது போன்று உள்ளது. இது குறித்து விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனின் காந்த புல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகின்றன என கூறி உள்ளது.

அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள்  கோரோணல்  என அழைக்கப்படும் பகுதிக்குள் தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும். இது சூரியனின் மற்ற பகுதிகளை விட அடர்வு குறைவானது.எனவே வழக்கமான சூரியகாற்றை விட இந்த ஓட்டையில் இருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிகமாக வெளியேறுகிறது.

சூரியன் மேற்பரப்பில் விழுந்துள்ள  புதிய பெரிய ஓட்டை காரணமாக அதன் வழியாக அதிவேகமாக வெளியேறும் சூரியகாற்று பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை செயல்படாமல் ஸ்தம்பிக்க செய்யும் என எச்சரித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.