பிரபாகரன் போட்ட சயனைட் மாலையை விட வைகோவுக்கு வேறு என்ன வேண்டும்? சத்தியராஜ்
“பயத்தை விடு, இல்லையென்றால் இலட்சியத்தை விடு” என்பது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கூற்று என இந்திய திரைப்பட நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
ஈழம் 87 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த வைகோ, பிரபாகரனை சந்தித்த கதைகளை கூறியதும் தாம் பிரம்மித்துப் போனதாக குறிப்பிட்டார்.
இதில் விடுதலைப்புலிகளின் தலைவர் 2 சயனைட் குப்பிகளை மாலையாக போட்டு இருந்தார்.
இவர் போட்டு இருந்த இரு சயனைட் மாலைகளில் ஒரு மாலையை வைகோவுக்கு போட்டார். இதை விட வைகோவுக்கு வேறு என்ன வேண்டும்? இந்த மாலையை விட வைகோவுக்கு வேறு எந்த மாலை வேண்டும், என சத்தியராஜ் குறிப்பிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்