ஜீப் மீது சொகுசு கார் மோதி பயங்கர விபத்து - 7 பேர் பலி..
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஜீப் மீது சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
சொகுசு கார் ஒன்று பந்தார்பூரிலிருந்து லத்தூர் மாவட்டம் கோல்பா பட்டி மாவட்டத்திற்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது முன்னே சென்ற லாரியை முந்த முயன்றுள்ளது. அப்போது டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரெ வந்த ஜீப் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்