Header Ads

கேரள இளைஞர்கள் 5 பேர் ஐஎஸ்-ல் இணைந்ததை கேரள போலீஸார் உறுதிப்படுத்தினர்



கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போரிட்டு வருவதை அம்மாநில போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திடீரென காணாமல் போன நிலையில் அவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக தகவல் வெளியானது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் அமைப்பு அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இவர்கள் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இவர்களில் சிலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்ததை தேசிய புலனாய்வு அமைப்பும், கேரள போலீசாரும் ஏற்கனவே உறுதிப் படுத்தியுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் குயாம் (25), அப்துல் மனாப் (30), ஷபிர் முகமது (33), சுகைல் (18), ஷபான் (17) ஆகிய ஐந்து பேர் காணாமல் போன நிலையில் அவர்கள் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேரள போலீஸார் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற முயன்று வருவதாக கூறியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.