5 கிலோ எடையுள்ள 263 நாணயங்கள், பிளேடுகளை விழுங்கிய அதிசய மனிதர்..
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மக்சூத் என்பவர் வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவருக்கு சஞ்சய் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் நாணயங்கள் மற்றும் இரும்பு ஆணிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றிலிருந்த நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டன. மேலும் 10-12 பிளேடுகள், 4 பெரிய ஆணிகள் மற்றும் இரும்பு சங்கிலி போன்றவை எடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த எடை 5 கிலோ ஆகும்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் இவற்றை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு முகமத் நலமாக இருக்கிறார். அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயாளி வயிற்றிலிருந்து 263 நாணயங்கள், பிளேடுகள் மற்றும் ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்