30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில் அக்காவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, ஏமாற்றிய தம்பியை கடத்திய ஆயுதக் கும்பல்
*கப்பம் கேட்டு சாரதி கடத்திய ஆயுத கும்பலோடு மது அருந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி....
*30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தம் பேசி சகோதரியை பிரான்ஸிற்கு அனுப்பி வைத்துவிட்டு, ஏஜென்சிகாரனை ஏமாற்றிய குடும்பம்.....
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரை கடத்திய ஆயுத கும்பல் குறித்த சாரதியை கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து துன்புறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளனர். ஆயுத கும்பலால் கடத்தப்பட்டவர் 28 வயதுடைய எலிஸ்டன் விமல் என்பவராவார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
“தன்னோடு இன்னும் இரண்டு இளைஞர்களை குறித்த வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர்களிடமும் கப்பம் கேட்டு ஆயத கும்பல் துன்புறுத்தியதாகவும் அதற்கு குறித்த இரு இளைஞர்களும் இங்கிலாந்திலுள்ள தமது உறவினர்களிடம் பணம் கேட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.என்னை கடத்திய ஆயுதக் கும்பலுக்கும் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது. மேலும் என்னை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் வந்து மது அருந்தி விட்டு செல்வார்
என்னை கடந்த 28ஆம் திகதி இரவு ஆமர் வீதி பன்சாலைக்கருகில் வைத்து இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கொழும்பு பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கம் போது காரில் நால்வரும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் இருந்து மேலும் அறுவரும் பின்னால் வந்தனர்.அவர்களிடம் கத்தி பெரிய இரும்பு ஆயுதங்கள் மற்றும் பெரிய சங்கிளிகள் என்பன இருந்தன. அந்த ஆயுதக் குழுவினர் என்னை இழுத்து காரினுள் தள்ளி கடத்திச சென்றனர். காரின் பின்னால் இரண்டு முச்சக்கர வண்டிகளும் பின் தொடர்ந்தன.
கொச்சிக்கடை பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ள வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கே என்னை கடத்திச் சென்று அடைத்து வைத்தனர். அங்கு 25க்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தனர்.அவர்கள் நன்றாக மது அருந்தி மது போதையில் இருந்தனர். அங்கு இருந்தவர்களில் ஒருவர் என்னை இரும்பு கம்பியால் தாக்கினார் அவர் தாக்கியதில் தலை காயமடைந்தது.இவர்கள் என்னை ஏன் கடத்தினார்கள் என்று முதலில் நான் அறிந்திருக்க வில்லை பிறகு தான் தெரிந்து கொண்டேன் அவர்கள் ஏஜன்ஸி ஒன்றை நடத்தி வருகிறார்கள் 30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரிலேயே அவர்கள் எனது சகோதரியை பிரான்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓப்பந்த தொகையின் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டு பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி இத்தாலிக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
இத்தாலி விமான நிலையத்தில் வைத்து எனது சகோதரியை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவை அனைத்தும் நடந்து முடிந்து பல வருடங்கள் ஆகின்றன. அக்கா கொடுக்க இருந்த மிகுதி பணத்தை பெறுவதற்காகவே என்னை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். மது அருந்திக் கொண்டு இருந்த நபர்களில் ஒரு பொலிசாரும் அடங்குவதாக அவர் மேலும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்