உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள, 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!

அதி நவீன தொலைகாட்டி மூலம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா மையமானது, 'கெப்லர்' தொலைகாட்டி மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றில் அயல் கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட வாழத்தகுதியுள்ள கிரகங்களில் கே.ஓ.ஐ.-7923.01 (K.O.I 7923.01) என்பதுவும் ஒன்று.
இது பூமியை போன்று பெரிய பரப்பளவு கொண்டதோடு, பூமியை போன்று இதமான வெப்பமும், குளிர்ச்சியான தண்ணீரும் அங்கு உள்ளது.
புதிய கிரகங்கள் பலவற்றில் சூரியனை போன்று நட்சத்திர சுற்று வட்டப் பாதைகள் உள்ளன.
பல கிரகங்களுக்கு நட்சத்திரங்களை சுற்றி வர 395 நாட்கள் எடுப்பதோடு, சில கிரகங்களுக்கு 18 நாட்களிலே போதுமானதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்