Header Ads

துருக்கியில் பாதுகாப்புப் படையினர் - கிளர்ச்சியாளர்கள் மோதல்: 13 பேர் பலி


துருக்கி - இராக் எல்லையோரத்தில் துருக்கி பாதுகாப்புப் படையினர் மற்றும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் 13 பேர் பலியாகினர்.

இதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், ''துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள செம்டெனில் நகரில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 8 பாதுகாப்புப் படையினரும், 5 கிளர்ச்சியாளர்களும் பலியாகினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

துருக்கி அரசுக்கும், குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.