என்னை உசுப்பேத்தியே அரசியலுக்கு வரவச்சுருவாங்க போல இருக்கு – நடிகர் விஜய் அதிரடி
சினிமாவை தாண்டி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அரசியல். ரஜினி, கமல் குறித்து கடந்த சில மாதங்களாக அரசியல் பேச்சுகள் எழும்பி வருகின்றன. கமல்ஹாசனும் வரும் நவம்பர் 7ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
விஜய்யும் அரசியலுக்கு வருகிறார் என்று நிறைய பேச்சுகள் எழும்புகின்றன. இந்த நிலையில் விஜய்யின் நண்பர்கள் அவரின் அரசியல் பற்றிய எண்ணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் அவர்கள் விஜய்யின் படங்கள் வரும்போது மட்டும் சில அரசியல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது. இதுவே விஜய் அரசியலில் நுழைவதாக இருந்தால் ஒரு காரணமாக இருக்கலாம். விஜய் கூட அரசியல் வாதிகளின் செயல்களால் என்னை அரசியலுக்கு வர வைத்துவிடுவார்கள் போல என்று கூறுவார் என அவரது நண்பர்கள் விஜய்யின் அரசியல் எண்ணம் குறித்த கருத்தை கூறுகிறார்கள் விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்