Header Ads

திருமண ஆசைக்காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.. சிறுமி செய்த விபரீத செயல்



சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற வாலிபர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோயம்பேடு பகுதியில் கூலி வேலை செய்து வரும் சசிகுமார், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதலில் விழ வைத்துள்ளார்.

அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானாள். இது பற்றி பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது.இதனால் மனம் நொந்துபோன சிறுமி ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்தது தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.