மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற தமிழர்: என்னை கொல்லப்போறாங்க என்று கதறல்!
மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற சென்ற தமிழர் ஒருவர் தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் இராமநாதபுரம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உச்சிபுளி அருகே குஞ்சாறுவளசை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் ஹோட்டலில் பணியாற்றுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்றுள்ளார்.
மலேசியா சென்ற அவரை அவர்கள் அங்கு கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். அதாவது தண்ணீர் மற்றும் உணவு எதுவும் கொடுக்காமலும், அதுமட்டுமின்றி தன்னுடைய ஊதியத்தை கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.
இதனால் அந்த இளைஞர அவர்களிடமிருந்து தப்பித்து பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் வீடியோ ஒன்றில் செல்வத்தை எதிர்த்து பேசியதால், அவர் கூலிப்படையினர் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அப்படி நான் கொல்லப்பட்டால் அதற்கு செல்வம் தான் முழு பொறுப்பு என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது அந்த இளைஞர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்