Header Ads

மடாதிபதி, நடிகையுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள், தொலைக்காட்சியில் வெளியானதால் பரபரப்பு..!


பெங்களூரு, கர்நாடகாவில், பெங்களூரு மத்தேவனபுரா மஹாதேவ சமஸ்தான மடாதிபதி, கன்னட திரைப்பட நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருந்த காட்சிகள், கன்னட செய்தி சேனல்களில் நேற்று வெளியாயின.

கர்நாடகாவில் பெங்களூரு எலஹங்கா அருகிலுள்ள, ஹுனச மாரனஹள்ளியில், 500 ஆண்டு பழமை வாய்ந்த, 'மத்தேவனபுரா மஹாதேவ சமஸ்தான மடம்' உள்ளது. 

இதன் மடாதிபதி, சிவாச்சார்ய சுவாமிகள். இவரது மகன் தயானந்த், தன் பெயரை, குருநஞ்சேஸ்வரா சுவாமிகள் என, மாற்றினார்.மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, 2011ல், தயானந்திடம் ஒப்படைக்கப்பட்டது.இவர், கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாகவும், 'டிவி' சீரியல்களிலும் நடித்துள்ள, நடிகை ஒருவருடன், உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள், கன்னட செய்தி சேனல்களில் நேற்று வெளியாகின.

இந்த தகவல் வெளியானதும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், மடத்தின் முன் குவிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், மடத்தை சுற்றி பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தயானந்த், தலைமறைவாகி விட்டார். இந்த வீடியோ, நான்கு ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்டதாகவும், மடத்தின் நிர்வாகிகள் சிலரே, தயானந்தை சிக்க வைக்க திட்டம் தீட்டியதாகவும், ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.போலீசார் கூறுகையில்,'பாதிக்கப்பட்டதாக, எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.