கலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகிறார் பிக்பாஸ் ஜூலி!
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜூலி, கலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலியை விஜய் டி.வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தனக்கு கிடைத்த மரியாதையையும், பெருமையையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்தமாக இழந்தார் ஜூலி.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனது செவிலியர் வேலையை விட்டுவிட்டு வந்த ஜூலி, அடுதத்தாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக ஜூலி கலா மாஸ்டர் மற்றும் மானாட மயிலாட புகழ் கோகுல் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்