Header Ads

நானும், தம்பியும் பெண்களுடன் உல்லாசமாக இருப்போம்.. பெண் கொலை தொடர்பில் கைதான சகோதரர்களின், பரபரப்பு வாக்கு மூலம்..

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சு.வாழவெட்டியை சேர்ந்த திருமலை என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கடந்த 22-ந் தேதி பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாந்தி (வயது 37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் சு.வாழவெட்டியை சேர்ந்த சத்தியராஜ் (26), அவரது தம்பி ஏழுமலை (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் சாந்தியை கொலை செய்தது, சத்தியராஜ் மற்றும் ஏழுமலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

முதலில் ஏழுமலையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ‘சாந்தியுடன் நானும், எனது அண்ணனும் மது அருந்தினோம். போதை அதிகமானதால் அன்று என்ன நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை’ என்றார்.

இதையடுத்து போலீசார் சத்தியராஜிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் வெளியானது. சத்தியராஜ் கூறியதாவது:-

நான் திருப்பூரில் வேலை செய்து வருகிறேன். நானும், எனது தம்பி ஏழுமலையும் ஒன்றாகத்தான் இருப்போம். அப்போது நாங்கள் இருவரும் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது வழக்கம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான் சு. வாழவெட்டிக்கு வந்தேன். பண்டிகை முடிந்து திருப்பூர் செல்வதால் எனது தம்பியிடம் யாராவது உனக்கு தெரிந்த பெண் இருந்தால் அழைத்து வா உல்லாசமாக இருப்போம் என்றேன். அதற்கு எனது தம்பி ஏழுமலை திருவண்ணாமலையை சேர்ந்த சாந்தி என்பவர் எனக்கு தெரியும். அவரை வர சொல்கிறேன் என்று கூறினான். சம்பவத்தன்று நானும், எனது தம்பி ஏழுமலையும், சாந்தியும் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று அங்கு 3 பேரும் மது அருந்தினோம். அதன் பிறகு முதலில் எனது தம்பி ஏழுமலை சாந்தியிடம் உல்லாசமாக இருந்தார். அதன்பிறகு நான் சென்றேன். அதற்கு சாந்தி இப்பதான் உன் தம்பி வந்தான். அதற்குள் நீயேன் வருகிறாய் என்று திட்டி உல்லாசத்திற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் இருந்த கல்லால் சாந்தியை அடித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
வாணாபுரம் அருகே பெண் கொலை: அண்ணன்-தம்பி கைது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.