போலீஸ் நிலயத்திலே நிர்வாணமாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கமேரி காவல் நிலயைத்திற்குட்பட்டது பாவ்ராகி காவல் நிலையம்.
பாவ்ராகி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேஜ்வீர் சிங். அந்த காவல் நிலையத்தின் வெளியே சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் வந்த தாஜ்வீர் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கி சென்று காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் அலறல்சத்தம்சிறுமியின் சத்தத்தை கேட்டு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த பொதுமக்கள் நிர்வாணமாக இருந்த தேஜ்வீர் சிங்கை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதன் காரணமாக அந்த சப் இன்ஸ் பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்