Header Ads

சூழ்ச்சி மட்டும்தான் தெரியுமா.? ஈழத் தமிழனின் வலிகளுடனான கேள்விக்கு, பதில் சொல்லுமா அமெரிக்கா.?




சூழ்ச்சி மட்டும்தான் தெரியுமா உனக்கு.? 

நாம் தமிழர் ஈழம் கேட்டோம் அன்று,
மகிந்தவுக்கு பின்னால் நின்று கொன்றாய் எம் தமிழரை..!

இறந்த எம் உறவுகளுக்கு நீதி கேட்டோம்,
ஜ.நாவுக்கு பின்னால் நின்றாய் நீ..!

மீண்டும் எழுந்து நின்றோம் வட மாகாண சபையாக,
ஆட்சியை மாற்றியும் சமஷ்ரி தர மறுக்கிறாய் இன்று..!

எதோ ஒரு சிறிய நாட்டில் (இலங்கை),
ஒரு இனம் தனமானத்துடன் நிற்பது பொறுக்கவில்லையா உனக்கு..?

இன்று உன்னை எதிர்த்து நிற்கிறது வட கொரியா,
நாளை என்ன சூழ்ச்சி செய்து வெல்ல காத்திருக்கிறாய் அமெரிக்கா..!

உலக முதலரசான வல்லரசு நீ,
எப்போது நேருக்கு நேராக எதிர்க்கும் நல்லரசாகப் போகிறாய்..?

இதெல்லாம் உண்மையாக இருக்காது என நினைக்க தோனுது எனக்கு,
இருந்தும் உண்மை என்கிறது தமிழினம்..!


கவிதை வரிகள்..

ஈழத்திலிருந்து..

ந.ஜெயகாந்தன்..

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.