Header Ads

விஷாலுக்கு டில்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு.! எதற்காக தெரியுமா.?


டில்லியில் உள்ள, வருமான வரி தலைமை அலுவலகத்தில் இருந்து,அழைப்பு வந்தது. அவர்கள், 'நடிகர் விஷால், எங்களை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, அவரது அலுவலகத்திற்கு, வருமான வரித்துறையினர் வந்து சென்றதாக கூறினார்; நீங்கள் ஏதேனும் சோதனை நடத்தினீர் களா' என, கேட்டனர்.நாங்கள் எதுவும் சோதனை நடத்தாததால், தமிழக வருமான வரித்துறை தலைமை அலுவலகமான, ஆயக்கர் பவனை தொடர்பு கொண்டோம்.

அவர்கள், விஷாலின் அலுவலகத்தில், டி.டி.எஸ்., எனப்படும், ஊழியர் வருமான வரி பிடித்த தொகையை, அரசுக்கு செலுத்துவதில் குளறுபடி இருந்ததால், அப்பிரிவு அதிகாரிகள், சரிபார்ப்பு விசாரணைக்கு சென்றதாக தெரிவித்தனர். அதன் பின்னரே குழப்பம் தீர்ந்தது.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
ரூ.50 லட்சம் வரி செலுத்த நடிகர் விஷால் உறுதி


'ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 50 லட்சம் ரூபாய் வருமான வரியை செலுத்துவதாக, நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த சோதனை தொடர்பாக,பத்திரிகை தகவல் சோதனை தொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: அலுவலகத்தில், பிடித்தம் செய்யப் படும், டி.டி.எஸ்., எனும் வருமான வரி குறித்த ஆய்வுகள், தமிழகம், புதுவையில், ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. நடப்பாண்டில், இதுபோன்ற, 400க்கும் மேற்பட்ட ஆய்வுகளை, வருமான வரித்துறை நடத்தி உள்ளது.

இந்த நடைமுறைகளின் போது, திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், சென்னையில் உள்ள வருமான வரிதுறைக்கு, 2016- 17ல், ஊழியர் களிடம் பிடித்தம் செய்த, 50 லட்சம் ரூபாய் வரியை செலுத்தவில்லை என, தகவல் வந்தது. அதனால், அங்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, விதிமீறலை ஒப்புக்கொண்ட அவர், செலுத்த வேண்டிய மொத்த தொகையை யும் உடனடியாக செலுத்துவதாக உறுதி அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.