எச் ஐ வி யினால் யாழில் மூவர் சாவு!
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் எச் ஐ வி தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் வைத்தியர் தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் எச் ஐ வி தொற்றுக்குள்ளான அறுவர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த 2014 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட எச் ஐ வி தொற்று தொடர்பிலான ஆய்வின் போது 39 பேருக்கு எச் ஐ வி தொற்று காணப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும்,
இவர்களின் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதோடு எஞ்சியிருப்போர் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்