Header Ads

அமெரிக்காவை 90% சதவிகிதம் அழிக்க வல்ல மின் அலை ஆயுதம் வட கொரியாவிடம் உள்ளது ?



மின் காந்த அலைகள் தொடர்பாக நாம் அறிந்திருப்போம். இது இயற்கையாகவும் ஏற்படும். அதனை செயற்கையாகவும் நாம் ஏற்படுத்த முடியும். சூரியனில் மின் காந்த அலைகள் உண்டு. அவை வெடித்து சிதறி பூமியை நோக்கி வந்தால். பூமியின் வட துருவத்தில் காணப்படும் காந்தப் புலத்தால் அது ஈர்க்கப்பட்டுவிடும். ஆனால் இதனை செயற்கையாக உருவாக்கி, சாட்டலைட் ஒன்றினூடாக பூமிக்கு ஏவினால், அது பெரும் அழிவை ஏற்படுத்தும்.

இவ்வாறு அனுப்பப்படும் மின் காந்த அலைகள், உடனடியாக அவ்விடத்தில் இருக்கும் அனைத்து எலக்ரானிக் கருவிகளையும் செயல் இழக்கச் செய்யும், மோபைல் போன் முதல் கொண்டு நவீன கார்கள் வரை இயங்காமல் போகும். அதுபோக , ஏவுகணை தளங்கள் மீது இத்தாக்குதல் நடைபெற்றால். ஏவுகணைகள் தானாகவே ஏவப்படலாம். மேலும் அணு உலைகளுக்கு அருகே நடந்தால். அணு உலை வெடித்தும் சிதறலாம். வானில் பறந்துகொண்டு இருக்கும், பல விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் வீழும். ஒரு தாக்குதலில் சுமார் 239 மைல் தூரம் வரை தாக்குதல் நடத்த முடியும்.

இந்த மின் காந்த அலை(அல்லது மின் காந்த புலம்) பொருத்தப்பட்ட சாட்டலைட் ஒன்றை ரகசியமாக வடகொரியா செய்து வருவதாகவும். அதனை அவர்கள் விண்ணில் ஏவ உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அதனை அவர்கள் விண்ணில் ஏவினால், ஏவுகணை கொண்டு அதனை தகர்க்க அமெரிக்கா திட்டம் தீட்டியுள்ள நிலையில். ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை , சாட்டலைட்டில் பொருத்த வட கொரியா முனைந்து வருகிறது, என்ற செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.