Header Ads

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 47 பேர் பலி, பலர் படுகாயம் - எப்படி நடந்த்தது திட்டமிட்ட சதியா?

இந்தோனேஷியாவின் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 47 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டாங்ஜெராங் என்ற இடத்தில் தொழிற்சாலை வளாகம் உள்ளது.

இந்த வளாகத்தில் உள்ள பட்டாசு உற்பத்தில் ஆலை ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக உள்ளே இருந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறத்தொடங்கின.


இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.

தகவலறிந்து பல வாகனங்களில் விரைந்து மீட்ப்புப்படையினர் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இருப்பினும் தீ மற்றும் கரும்புகை காரணமாக மீட்புப்பணி சவாலாக இருப்பதாக மீட்புப்படையினர் கூறியுள்ளனர்.

103 தொழிலாளர்கள் விபத்து நடந்த நேரத்தில் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 47 பேர் பலியானதாகவும், 43 பேர் காயங்களுடன்மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.