வவுனியாவில், நேருக்கு நேர் மோதிய பேருந்து - கொள்கலன்; 24பேர் வைத்தியசாலையில்!
வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 24பேர் படுகாயம் வவுனியாவில் இன்று 30 காலை 6மணியளவில் ஓமந்தைப்பகுதியில் வவுனியாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேருந்துடன் பால் கொள்வனவிற்குச் சென்ற கொள்கலன் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது இதில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் 24பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று 30 காலை ஓமந்தை பனிக்கர்நீராவியடி பகுதியில் வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேருந்து எதிரே வந்த பால் கொள்வனவிற்குச் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதியதில் பேருந்தில் பயணித்த ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் 24பேர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலர் அதி தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்