2015ம் ஆண்டை நினைவுபடுத்தும் கன மழை - அச்சத்தில் சென்னை மக்கள்!
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவில் இருந்து தொடர் கனமழை பெய்து வருகிறது.
தற்போது வரை பெய்துள்ள மழையே சென்னையில் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னைவாசிகள் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த தொடர் மழை கடந்த 2015ம் ஆண்டு ஒட்டுமொத்த சென்னையையும் புரட்டிப்போட்ட மழையை நினைவுபடுத்துவதாகவும் சென்னை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்