Header Ads

நான் அதொன்றும் ஒட்டுகேட்கலையே! tடிரம்பின் அதிரடியால் இவர் பீதியில்

அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப், போட்டியிட்ட போது, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்க உறுப்பினர்கள், டிரம்பின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு, 


முன்னாள் அமெரிக்க உளவுத்துறை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல், தனது தொலைபேசி அழைப்பை ஒட்டு கேட்டதோடு, அவற்றை சட்டவிரோதகமாக பதிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தன காரணமென குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 


தற்போது அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர், டிரம்பினதும், அவரது கட்சியினதும் எவ்வித தொலைபேசி அழைப்புகளும் ஒட்டு கேட்கப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.