அமெரிக்காவில் இந்திய நபர் மீது மீண்டும் தீவிர தாக்குதல்! எதற்க்காக இப்படி செய்கிறார்கள் ?
அமெரிக்காவில் 3-வது இந்தியர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் வாழும் இந்திய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் 3-வது இந்தியர் மீது துப்பாக்கி சூடு: இனவெறியில் அமெரிக்கர் தாக்குதல் நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ தடை விதித்தார். அதைத் தொடர்ந்து அங்கு இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்களும், அதைத்தொடர்ந்து உயிரிழப்புகளும் நடந்துள்ளன.
கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த சீனிவாஸ் குச்சிபோத்லா என்ற என்ஜினீயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த படுகொலையின் சுவடு மறைவதற்கு முன் மீண்டும் நேற்று தெற்கு கரோலினாவில் இந்திய வர்த்தகர் ஹர்னீஷ்படேல் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு இந்தியர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதுவும் இன வெறியால் நடந்துள்ளது. வாஷிங்டன் மாகாணம் கென்ட் நகரில் 39 வயது சீக்கியர் ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு அமெரிக்கர் வந்தார். சீக்கியரை பார்த்து “நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள்” என்றார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, அமெரிக்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சீக்கியர் மீது சுட்டார். அதில் அவரது உடலில் குண்டு பாய்ந்தது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் 6 அடி உயரம் இருந்தார். வெள்ளைக்காரரான அவர் தனது முகத்தை பாதி அளவு மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து இருந்தார். அதுகுறித்து கென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எப்.பி.ஐ. மற்றும் உளவுப் பிரிவு அமைப்புகளும் இது குறித்து தீவிர விசாரணை செய்கின்றனர்.
இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் வாழும் இந்திய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்