பாணந்துறையில் இந்தப்பெண் வீட்டில் தனியாகத்தான் இருந்தாராம்! அதுவும் நிர்வாணமாக கிடந்த கொடூரம்
பாணந்துறை - கோயில் தோட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 4 மாடி கட்டிடம் ஒன்றின் அறையில் தனியாக இருந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை காவற்துறை தெரிவித்துள்ளது.
சடலத்தை கண்டறிந்த போது அது நிர்வாணமாக இருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தெல்தொட்ட – லுல்கந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்த, மொரட்டுவை உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 47 வயதான ஒரு பிள்ளையின் தாய் என காவற்துறை இனங்கண்டுள்ளது.
உயிரிழக்கும் போது அவர் அணிந்திருந்த உடை மற்றும் அவரின் ஏனைய உடைகளும் அந்த பெண் உயிரிழந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சடலத்தை கைப்பற்றிய போது கடுமையாக சிதைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்