மகிந்தவின் பாதுகாப்பை குறைக்க மாட்டோம்: ரணில் தனது வாலை எப்படி ஆட்டினார் தெரியுமா பாருங்கள்
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நாம் குறைக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாவின் போது விமலவீர திசாநாயக்க எழுப்பிய வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதலளித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமலவீர திசாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பும் போது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு சேவையில் ஈடுப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிரயாண செலவு மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒன்று விசேட கொடுப்பனவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொலிஸ் உத்தியோகத்தவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களது விசேட கொடுப்பனவு மே மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க பதலளிக்கையில், அமைச்சு பாதுகாப்பின் கீழேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறாதவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படாது. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியின் காலத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கப்பட்டன. ஆனால் நாம் அனைவரும் சலுகை வழங்கி வருகின்றோம்
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்