தினமும் பாலியல் தொழில் ஆனால் இவர் போலிசின் மனைவி: லண்டனில் தானா ?
பிரித்தானிய நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருவதற்கு உயர் அதிகாரிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Scott Frost(41) பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவியான Sarah Jane(30) கணவரின் அனுமதியுடன் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்.
கணவரின் வருமானம் குறைவாக இருப்பதால் இத்தொழிலில் ஈடுப்பட்டு வருவதாகவும், இதற்கு கணவரும் அவரது குடும்பத்தினரும் முழு ஆதரவு அளிப்பதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் அதிகாரியின் மனைவி நிருபர் ஒருவருக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘வாரத்தில் 3 நாட்கள் நாடு முழுவதும் பயணத்தில் இருப்பேன். புது புது தொழிலதிபர்களை சந்தித்து பாலியல் உறவில் ஈடுப்பட்டு வருகிறேன்.
ஒரு மணி நேரத்திற்கு 130 பவுண்ட் கட்டணமாக வசூலிக்கிறேன். இத்தொழிலளை 18 வயது முதலே செய்து வருகிறேன்.
இது எனது கணவருக்கும் நன்றாக தெரியும்’ எனக் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரியான கணவரிடம் பேசியபோது ‘எனது மனைவி பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருவது எனக்கும், எனது நண்பர்களுக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும்.
இதை எனது உயர் அதிகாரிகளுக்கு நேரடியாகவே தெரிவித்து விட்டேன். இதற்கு அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை, எதிர்ப்பு தெரிவித்திருந்தால் எனது பணி எப்போதே பறிக்கப்பட்டிருக்கும்’ என பதிலளித்துள்ளார்.
இறுதியாக நிருபர் உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, ‘இதில் தவறு இல்லை. பொலிஸ் அதிகாரியும் வெளிப்படையாக எங்களிடம் மனைவியின் தொழில் குறித்து தெரிவித்துவிட்டார்’ என பதிலளித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுப்படுவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்