Header Ads

இது சாதா ஏ.டி.எம் இல்ல, தாகம் வந்தா தனஈ எடுத்து குடிக்கலாம்!!

பத்தாம் வகுப்பு விடு முறையில் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி தியாவுக்கு அந்தக் கிராமத்தின் எல்லா வி‌ஷயங்களும் மிகவும் பிடித்திருந்தன. ஒன்றே ஒன்றைத் தவிர..! அதுதான் தண்ணீர் தட்டுப்பாடு. அது சர்வதேச பிரச்சினை என்றாலும் தன்னால் தீர்வு காண முடியுமா...? என சிந்தித்து, ஒரு திட்டத்தை செயல் படுத்தினார்.


அது தான் தண்ணீர் ஏ.டி.எம். இயந்திரங்கள். குடிநீரைச் சுத்திகரிப்பதில் முன்னணி நிறுவனமான யுரேக்கா போர்ப்ஸிடம் நிலைமையை விளக்கி கூறி, மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அவர்களும் தியாவின் முயற்சிக்கு இசைந்துக்கொடுக்கவே இன்று மகாராஷ்டிரா, ஒடிசா, கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைக்கிறது. அதுவும் ஏ.டி.எம். அட்டைகளின் வழியே. அது பற்றி தியாவிடம் பேசினோம்.. * அது என்ன ஏ.டி.எம். குடிநீர் திட்டம்? ‘‘அதன் பெயர் ‘ஜல் ஜீவன்’. சொந்த ஊரில் சந்தோ‌ஷமாக தங்க குடிதண்ணீர் தடையாக இருந்த விரக்தியில் ‘யுரேக்கா போர்ப்ஸ்’ நிறுவனத்திற்கு புகார் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். அவர் களும் முறையாக பதிலளித்தனர். 


‘‘இலவசமாக வழங்கப்படும் சுத்திகரிப்பு உபகரணங்களை முறையாக பாதுகாத்தால் நிச்சயம் உதவுகிறோம்’’ என்ற வாக்குறுதியுடன் உதவ முன்வந்தனர். இதை பற்றி ஷோலாப்பூர் (சொந்த ஊர்) மக்களிடம் கூறியபோது அவர்களும் வரவேற்றனர். பிறகு தான் ஏராளமான ஏ.டி.எம். குடிநீர் இயந்திரங்களை நிறுவினோம். * ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது?


 ‘‘மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏ.டி.எம். அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 20 லிட்டர் குடிதண்ணீர் பெறலாம். பெண்கள் குடிதண்ணீருக்காகப் பல மைல் தொலைவு நடப்பது குறைந்ததால் மக்களிடம் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது’’ என்று கூறும் தியாவிற்கு ஏராளமான பாராட்டுகள் இன்று வரை குவிந்து வருகின்றன. சமூக அக்கறையில் அதிக கவனம் செலுத்தும் தியா, இன்று கல்லூரி பருவ பெண்ணாக மாறிவிட்டார். இருப்பினும் அவரது சமூக அக்கறை குறைந்த பாடில்லை. சூரிய வழி மின்சாரம், சுகாதாரமான குடிநீர் இணைப்பு, 


பெண் கல்வி... என சமூக சிந்தனையை வேகமாக சுழற்றிவிடுகிறார். அதில் குடிநீர் ஏ.டி.எம். இயந்திரமும், நாடகமேடையும் தியாவிற்கு பெரும் புகழை பெற்று தந்திருக்கிறது. லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்றுவரும் தியா, அங்கிருந்தபடியும் சமூக அக்கறையை வெளிகாட்டுகிறார். ‘‘சமூக சேவை உற்சாகத்தை கொடுத்தால், நடிப்பு திறன் சந்தோ‌ஷத்தை கொடுக்கிறது. நாடகங்கள் என்றவுடன் காதல்–கல்யாணம் என்று நினைத்துவிடாதீர்கள், இந்தியாவின் புராண கதைகளை இங்கிலாந்து மக்களுக்கு பிடித்த வகையில் நடித்து காட்டுகிறேன். 


இதற்காக தனி நாடக குழுவும் இங்கிலாந்தில் செயல்படுகிறது. குடிநீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வாங்குவது, மின்சாரம் துண்டிக்கப்பட்ட கிராமங்களை மின் ஒளியால் ஒளிர்வூட்டுவது... என நாடகங்களில் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி கொள்கிறோம். கதாநாயகியை விட ‘சமூக சேவகி’ என்ற கதாபாத்திரத்தில் தான் சிறப்பாக நடிக்கிறேன். இனியும் நடிப்பேன். ஏனெனில் உலகமே ஒரு நாடக மேடை தான். அதில் என்னுடைய கதாபாத்திரமும் பேசப்படவேண்டும்’’ என்று பேசி முடிக்கும் தியாவை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சுஷ்மா சுராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.