Header Ads

கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்! அதிரடியாக உருவாகிய பரபரப்பு

திருவனந்தபுரம்- நடிகர் கலாபவன்மணி மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்க கோரியும், முறையான விசாரணை நடத்தக் கோரியும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 


பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் பூச்சி கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. 


இதையடுத்து கலாபவன் மணி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரது நண்பர்கள், நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே கலாபவன் மணியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று உறவினர்கள் கேரள அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிற்கு கேரள அரசு கடிதம் எழுதியது. 


ஆனால் இதுவரை விசாரணை தொடங்கவில்லை. இந்த நிலையில் கலாபவன் மணி மரணத்தில் மர்மத்தை நீக்க முறையான விசாரணை நடத்த கோரி அவரது உறவினர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள கலாபவன் மணி வீட்டின் அருகில் அவரது சகோதரர் தம்பி ராமகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இன்று 2வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இதில் கலாபவன் மணியின் உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.