ஒஸ்கார் விருது குழப்பத்தால் அச்சுறுத்தலில் பணியாளர்கள் : பாதுகாப்பு வழங்கியுள்ள கணக்கு நிறுவனம்..!
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தியதாக கூறப்படும் கணக்காளர்கள் இருவருக்கும் சமூகவலைத்தளங்கள் ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைபடத்துறையினரின் உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், பிரைன் கல்லினன் மற்றும் மார்ட்டர் ரூயிஸ் ஆகிய இருவரும், தொகுப்பாளர்களாக இருந்த வாரேன் பெய்ட்டி மற்றும் பெய் டன்னவே ஆகியோரிடம் தவறான அட்டையை வழங்கியதால்,
வருடத்தின் சிறந்த திரைப்படமாக லாலா லேண்ட் அறிவிக்கப்பட்டு பின்பு மூண்லைட் அறிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வினால் கடந்த புதன்கிழமையன்று, 89 வருடகால விழா சிறப்பில் தவறிழைத்த குற்றத்திற்காக ஒஸ்கார் விழா வேலைகளில் அவர்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும்,
ஆனால் பணி நீக்கம் செய்யப்படவில்லை என பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஊடகங்களில் இருவரின் வீட்டு முகவரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் வெளியானதால், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூப்பர்ஸ் நிறுவனத்தின் பேச்சாளரான கேரி போரென்ஹெய்மர் தெரிவித்துள்ளார்..
விழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரை கொண்ட அட்டையை வழங்குவதற்கு பதிலாக, முன்னணி கதாபாத்திரத்திற்காக,
சிறந்த கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் இடம்பெற்றுள்ள அட்டையை வழங்கியிருந்தார்கள்.
மேலும் ஒஸ்கார் விருதுகளுக்கான வாக்குகளை எண்ணி, அட்டைகளை சேர்க்கும் பணிகளை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. குறித்த ஒஸ்கார் விழாவில் ஏற்பட்ட குழப்பத்திற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்