யாரிந்த சுப்புன் கெல்லபத்த ? இவருக்கு கனடாவில் அகதியாக வேண்டுமாம்! எதற்காக ?
ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையர் ஒருவரது குடும்பம் கனடாவில் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்யாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருக்கான வாழிட அனுமதியை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை ரஷ்ய அரசாங்கம் நீட்டித்துள்ளது.
இவரது தலைமறைவு வாழ்க்கையின்போது ஹொங்கொங்கில் புகலிடம் கொடுத்ததாக, இலங்கையரான சுப்புன் கெல்லபத்த மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுப்புன் குடும்பத்தினர் ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள்.
தம் மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் அச்சத்தின் பேரில், தமது சட்டத்தரணிகள் மூலம் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
நீண்ட காலமாக ஹொங்கொங் அரசு இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்காதிருக்கும் நிலையில், திடீரென தாம் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே கனடாவில் விண்ணப்பித்துள்ளதாக சுப்புன் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சுப்புன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பிலிப்பீனைச் சேர்ந்த ஒருவரும் இந்தக் குற்றச்சாட்டில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்