எனக்கு எதிராக ஆர்பாட்டங்களை தூண்டுவது ஒபாமா தான்: கசிந்தது வெள்ளை மாளிகை ரகசியம்
அமெரிக்காவில் புகழ்பெற்ற பொஃக்ஸ் செய்தி சேவைக்கு, அதிபர் ரம் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியவேளை குறுக்கிட்ட நிருபர், உங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பல ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறதே. அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதுபோக வெள்ளை மாளிகை ரகசிய தகவல் படி, நீங்கள் இதன் பின்னணியில் முன் நாள் அதிபர் ஓபாமா இருப்பதாக நம்புவதாக கூறுகிறார்களே இது உண்மையா என்று கேட்டார்.
ஆம் என்று பதிலளித்த டொனால் ரம். எனக்கு எதிராக நடத்தப்படும் ஆர்பாட்டங்கள், கண்டன பேராணிகளுக்கு பின்னால் முன் நாள் அதிபர் ஒபாமாவே உள்ளார் என்றும். அவருக்கு நெருக்கமான ஆட்கள் மற்றும் அதிகாரிகளே இதனை தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஏனடா நாம் ரம்புக்கு வாக்குகளை போட்டோம் என்று. அவருக்கு வாக்கு போட்ட மக்களே தற்போது தலையில் துண்டை போடும் அளவுக்கு அவர் செயல்பாடுகள் உள்ளது என்பதே உண்மை ஆகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்