யாரிந்தப் பெண்? இவருக்கு நேர்ந்தது என்ன ? எதற்காக இவர் துடிக்கிறார் ?
ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்த தலால் எனும் பெண், கொடுமைகளை தாண்டி பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தரணியாக உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஈராக்கின் சின்ஜார் பிராந்தியத்திலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுஇ சுமார் 9 தீவிரவாதிகளால் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு, மீண்டும் அகதிகள் மையத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும், மனித உரிமைகள் சட்டத்தரணியாக உருவாகும் முயற்சியை முன்னெடுத்துவருகிறார் 20 வயதான தலால்.
ஜேர்மனியிலுள்ள அகதிகள் புகலிடம் மையத்தில் தஞ்சமடைந்ததுள்ள தலால், கடுமையான போராட்டங்களை எதிர்க்கொண்டு தீவிரவாதிகளிடமிருந்து மீண்டுள்ளதோடு, சிறுவயது முதலான தனது சட்டத்தரணியாகும் கனவை அடைந்து, அதனுடாக பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கெதிராக போராடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து, அவர்களின் பாதுகாப்பிற்காக போராட துடிக்கும் அவருக்கு, ஜேர்மனியின் படேன் நகரிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்