Header Ads

இந்திய பெண்ணுக்கு நடந்தது என்ன ? இவர் என்னதான் செய்தார்! அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் இந்திய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஏக்தா தேசாய் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இது குறித்து ஏக்தா தேசாய் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், நான் அமெரிக்காவின் நியூயோர்க் ரயில் நிலையத்தில் உள்ள ரயிலில் பயணம் செய்தேன். என்னுடன் 100 பேர் அப்போது பயணம் செய்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர் நான் இந்தியர் என்பதை அறிந்து என் அருகில் வந்து தகாத வார்த்தைகளால் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார்.


இதை அருகிலிருந்தவர்கள் யாரும் தட்டி கேட்கவில்லை. நான் அதை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பின்னர் அருகிலிருந்த ஆசிய பெண்ணிடமும் அவர் இதை செய்தார் என அவர் கூறியுள்ளார். அமெரிக்கர் இனவெறியுடன் பேசிய வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது சம்மந்தமாக பொலிசார் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிகிறது. 


அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.