திடீரென நடந்த கோர விபத்து! இதானால் எத்தனை பேர் மரணம் தெரியுமா ?
நேபாள நாட்டில் காலங்கா என்ற இடத்தில் இருந்து காரா என்ற இடத்தை நோக்கி நேற்று முன்தினம் ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
அந்த பஸ், தாங்கரேதண்டா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச் சென்று 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் ஓலமிட்டு அலறினர்.
பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நேபாள ராணுவமும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை செய்தனர்.
இரவு பார்வை கருவி வசதியுடன் கூடிய ஹெலிகாப்டர் உதவியுடன் இந்த மீட்புப்பணி நடந்தது.
இந்த விபத்தில் 25 பேர் உடல் நசுங்கி உயிரிழந்து விட்டதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, ஜாஜர் காட்டில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
டிரைவர் அதிவேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்