படுக்கையை பகிர்ந்த பெண் நெருப்பூட்டி படுகொலை: லேசாக பற்ற கூடிய திரவத்தை ஊற்றி எரித்தார்
குவைத்தில் இலங்கை பெண் ஒருவர் அவருடைய படுக்கை துணைவனாக இலங்கை ஆண் ஒருவரால் படுக்கை அறையில் வைத்து உடலில் நெருப்பூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.நெருப்பு இலேசாக பற்ற கூடிய திரவம் ஒன்றை படுத்திருந்த துணைவியின் உடலில் ஊற்றிய பிற்பாடு நெருப்பை பற்ற வைத்து உள்ளார்.
இவர்கள் வசித்த தொடர் மாடியில் நெருப்பு மூண்டதாக தகவல் வந்ததை அடுத்து மீட்பு பணியாளர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்றிருந்தனர்.பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனராயினும் தீக்காயங்கள் காரணமாக இறந்து போனார்.அயலவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையிலேயே இப்பெண் இலங்கை ஆண் ஒருவருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார் என்று தெரிய வந்தது.
ஆயினும் இந்த ஆண் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாரால் உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை.ஆயினும் இவரை தேடி பிடித்தனர். இவருடைய கைகள், பாதங்களிலும் காயங்கள் இருந்தன.இது குறித்து விசாரித்தபோது தற்கொலைக்கு முயற்சித்த, இப்பெண்ணை காப்பாற்ற முயன்றபோது தீயில் அகப்பட்டு காயப்பட்டார் என்று ஆரம்பத்தில் பொய் கூறி இருக்கின்றார்.ஆனால் தொடர்ந்து விசாரித்ததில் படுத்திருந்த பெண்ணின் உடலில் இலகுவாக தீப்பற்ற கூடிய திரவம் ஒன்றை ஊற்றி தீ மூட்டினார் என்று உண்மையை ஒப்பு கொண்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்