Header Ads

கிம் ஜாங் நாம் கொலைக்கு கொடூர இரசாயனம் பயன்படுத்தப்பட்ட சம்பவம்! அந்த ரசாயனம் எப்படிபட்டது தெரியுமா ?

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொடிய இரசாயனத்தை மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் பயன்படுத்தி, வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரை கொலை செய்தமைக்கு, மலேசியா தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 


வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின், சகோதரரான கிம் ஜாங் நாம், கடந்த மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து உலக நாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ள வி எக்ஸ் (VX) என்ற இரசாயனத்தை பயன்படுத்தி இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகள் மூலம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரிய அதிகாரி என்போரை, மலேசிய பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில் கிம் ஜாங் நாம்மை கொல்வதற்காக, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட வி எக்ஸ் என்ற கொடிய நச்சு இரசாயனம் பயன்படுத்தியுள்ளமை, அவரது பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது, குறித்த சம்பவத்திற்காக கொடிய ரசாயனத்தை பயன்படுத்தியுள்ளமை மிகவும் அதிர்ச்சி அளிப்பதோடு, மிகவும் கண்டனத்துக்குரிய விடயமென மலேசிய அரசதரப்பு அறிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 


அத்தோடு எவ்விதமான நோக்கத்திலும், எந்த சூழ்நிலையிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களில் மிகவும் கொடிய நச்சு இரசாயனத்தை பயன்படுத்தப்படுவதை தமது அரசு வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் குறித்த வகை ஆபத்தான இரசாயனங்களை அந்நாடு உற்பத்தியோ, இறக்குமதியோ செய்வது கிடையாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.