வாடா கொரியாவின் நெகிழும் அதிரடி! தடை ஏதுமில்லை! மீண்டும் அணுகுண்டை சோதித்தார்கள்
டோக்கியோ- உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் அதிபர் கிம்ஜோங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவர் ஆட்சிக்கு வந்தது முதலே அணு ஆயுத சோதனையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். உலக நாடுகள் மற்றும் ஐநா சபை பலமுறை எச்சரித்தும், பொருளாதார தடை விதித்துள்ள போதும் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருகிறார்.
பிரதான எதிரிநாடான தென்கொரியா மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில்,
கிம்ஜோங் உன் செயல்பட்டு வருகிறார். தங்கள் உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில், வடகொரியா இன்று காலையில் ஆணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதி மற்றும் கொரியன் தீபகற்பத்துக்கு இடையே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இதில் ஒரு ஏவுகணை அமெரிக்காவை சென்று தாக்கும் சக்தி கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அணு ஆயுத சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா 4 ஏவுகணைகளை சோதித்துள்ளதாகவும், அவற்றில் 3 தங்கள் நாட்டு கடலில் விழுந்ததாகவும் ஜப்பான் கூறியுள்ளது. இதற்கிடையே, வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில்,
தெற்கு கொரியா தனது பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தியது.
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருவது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்