என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிய போலிஸ்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி - காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புலவர்மா மாவட்டம் டிரால் பகுதியில் ஹிஸ்புல் முஜாதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த பகுதி கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்கான் வானியின் சொந்த நகரமாகும்.
இங்குள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தெரியவந்ததும் பாதுகாப்பு படை வீரர்களும் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு போலீசாரும் நேற்றிரவு அப்பகுதிக்கு அங்கு சென்றனர்.
பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் புர்கான்வானியின் உதவியாளர் உள்பட 2 தீவிரவாதிகள் சிக்கினர்.
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மன்சூர் அகமது என்ற போலீஸ்காரர் பலியானார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ராணுவ அதிகாரி உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதைதொடர்ந்து, துப்பாக்கி சூடு நடைபெற்ற வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில் ஒருவர் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர், மற்றொருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,
பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் டிரால் நகரம் மற்றும் புல்வாமா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அருகாமையில் உள்ள சோபியான் மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கிறது. சில இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தெற்கு காஷ்மீர் பகுதியில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்