பர்ஸ் விழுவதை நிதானமாக பார்த்து: காரில் இருந்து இறங்கி 1,600 பவுண்டை ஆட்டையை போட்ட பெண்
லண்டனில் ஒரு வர்த்தகர் தனது கடையில் இருந்து வெளியே சென்றுள்ளார். மொத்த பொருட்கள் வாங்கும் காஷ் அன் கரிக்கு அவர் செல்ல 1,600 பவுண்டுகளை அவர் தனது பர்சில் எடுத்துச் சென்றுள்ளார். அவர் கடைக்கு வெளியே வந்தவேளை பர்ஸ் நிலத்தில் விழுந்துவிட்டது. இதனை நிதானமாக கவனித்துகொண்டு இருந்த பெண், உடனே தனது காரை நிறுத்திவிட்டு. வெளியே வந்து நிலத்தில் இருந்த பர்ஸை அடித்துச் சென்றுள்ளார்.
கடைக்கு திரும்பிய வர்த்தகர், தனது பர்ஸை காணவில்லை என உணர்ந்து CCTV கமராவை பார்த்தவேளை. குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதை கண்டு அதிர்ந்துபோனார். உடனே அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த வீடியோவை கொடுக்க. அது வைரலாக பரவ ஆரம்பித்துவிட்டது. இதனை அறிந்த பொலிசார் தற்போது குறித்த காரின் நம்பர் பிளேட்டை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
வெகு விரைவில் இப்பெண் சிக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விடையத்தை அறிந்தால் அப்பெண் தானே முன் வந்து பர்ஸை திருப்பி கொடுத்து, பொலிசார் பிடியில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்