Header Ads

15 வயது சிறுமியை காரில் கடத்தி இந்த ஆசாமி செய்த வேலையை பாருங்கள்! இவரும் போலீஸ்தான்

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் 15 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்ற போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்ற போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் கைது ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள காமாத்ரிபுத்ரா காவல் நிலையம் அருகில் வசித்துவரும் ஒரு இளம்வயது பெண், தனது 15 வயது தங்கையை போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் காரில் கடத்திச் சென்றதாக காமாத்ரிபுத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த நபரான மெஹ்பூப்(43) என்பவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் நிலையில் அவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக காமாத்ரிபுத்ரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதர்சன் இன்று தெரிவித்துள்ளார். பிடிபட்ட மெஹபூபிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்படுமா? 


என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இன்ஸ்பெக்டர் சுதர்சன், மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம், பரிசோதனை முடிவுகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.