Header Ads

ஐ.எஸ். அமைப்பின் ட்ரோன் வழி ஆகாயத் தாக்குதல்கள்! அதிர்ச்சிக் காணொளி வெளியீடு!

ஈராக்கின் வடபிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். அமைப்பு, தமது தாக்குதல்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 


இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் ஐ.எஸ். நடத்திய ‘ட்ரோன்’ மூலத் தாக்குதல்களை தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஐ.எஸ். அமைப்பின் உத்தியோகபூர்வ ஊடகமான அல்-நபா, சுமார் ஆறடி நீளமுள்ள ட்ரோன் ஒன்று குண்டுகளை ஏந்திச் சென்று ஈராக்கியப் படைக்குச் சொந்தமான தாங்கி ஒன்றின் மேல் வீசும் காட்சியை வெளியிட்டுள்ளது.



 ‘முஜாஹிதீன்களுடைய ஆளில்லா விமானப் படை’ என்ற பெயரில் ஐ.எஸ். இயக்கம் ட்ரோன்களை தாக்குதலுக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம் மட்டும் இந்த ட்ரோன்கள் மூலம் 39 ஈராக்கியத் துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்.ஸின் இந்தப் புதிய தாக்குதல் கூட்டுப் படையினருக்கு ஒரு தலைவலியாக இருக்கும் என்றாலும், 



இத்தாக்குதல்கள் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படலாம் என்பதே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.