Header Ads

இவனிடம் பணிந்த சம்பந்தர்! இவர்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா ?

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்பந்தன் சர்­வ­ஜன வாக்­கெடுப்பின் பின்னர் பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா ரணிலா அம­ர­வேண்டும் என்­ப­த­னையும் தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் அர­சாங்கம் ஆட்­டம்­காணும். 


மஹிந்­தவின் அர­சாங்க கவிழ்ப்பு முயற்­சியும் சாத்­தி­ய­மாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அர­சாங்­கத்தை 2017 ஆம் ஆண்டில் கவிழ்க்­க­வேண்டும் என்ற மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பொறியில் எதிர்க்­கட்சி தலைவர் சம்­மந்தன் மற்றும் மங்­கள சம­ர­வீர , சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் சிக்­கி­விட்­டனர். 



சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்த இவர்­களின் நோக்கம் நல்­ல­தாக இருக்­கலாம். ஆனால் அதன் விப­ரீ­தத்­தன்மை புரி­யாமல் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்­றனர். மேலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தத்தை செய்­வதே தற்­போ­தைய நிலை­மையில் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிலைமை என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 



சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து குறிப்­பி­டு­கையில், நீண்­ட­கா­லத்­துக்குப் பின்னர் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. எனவே அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி விரைந்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வைக்­கா­ண­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்தி தீர்­வைக்­கா­ணலாம் என ஐக்­கிய தேசிய கட்சி கூறி­வ­ரு­கின்­றது. 



ஐக்­கிய தேசிய கட்சி மட்­டு­மன்றி எதிர்க்­கட்சித் தலைவர் சம்­மந்தன் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மங்­கள சம­ர­வீர மனோ கணேசன் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகி­யோரும் சர்­வ­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்று கூறி­வ­ரு­கின்­றனர். ஆனால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ராமல் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுத்து மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளது.


காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சென்றால் அது அர­சியல் கார­ணங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு தோல்­வி­ய­டையும் நிலைமை ஏற்­ப­டலாம். இதன்­மூலம் 2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்பேன் என்று கூறி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கூற்று சாத்­தி­ய­மாகும் நிலை ஏற்­படும். அர­சாங்கம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்தும் என்று உறு­தி­பட கூறு­கின்­ற­மையின் கார­ண­மா­கவே அர­சாங்­கத்தை கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த கூறு­கிறார். 



இதனை புரிந்­து­கொள்­ளாத சம்­மந்தன் மங்­கள சந்­தி­ரிகா ரவூப் ஹக்கீம் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பொறியில் சிக்­கி­விட்­டனர் என்றே கூற­வேண்டும். இவ்­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்சித் தலைவர் புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­த­ப­ட­வேண்டும் என்று கோரினார். அது அவர் உய­ரிய நோக்­கத்­துடன் கூறிய விட­ய­மாக இருக்­கலாம். 


ஆனால் அவர் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­மந்தன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் பின்னர் பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா ரணிலா அம­ர­வேண்டும் என்­ப­த­னையும் தீர்­மா­னிக்­க­வேண்டும். காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் அர­சாங்கம் ஆட்­டம்­காணும். மஹிந்­தவின் அர­சாங்க கவிழ்ப்பு முயற்­சியும் சாத்­தி­ய­மாகும் அபாயம் உள்­ளது. இதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரும் தரப்­புக்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது மிகவும் முக்­கி­ய­மான கட்­டத்­துக்கு வந்­துள்­ளது. 



அதா­வது பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற கட்­டத்­துக்கு சுதந்­திரக் கட்சி வந்­துள்­ளது. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு செல்­லாமல் தற்­போ­தைய அரசியலமைப்பை திருத்துவதே பொருத்தமாக அமையும். மாறாக சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. எம்மிடம் இது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றவர்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அதன் விபரீதத்தன்மை புரியாமல் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகின்றனர். இந்த விடயத்தில் அரசியல் கள நிலையை புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.