அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை
அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் தமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவதில்லை என ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்சியொன்றில் தோன்றி சூளுரைத்துள்ளான்.
லாதீன் என்ற அந்த சிறுவன், நபரொருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் தான் எவ்வாறு மேற்படி தீவிரவாதக் குழுவில் இணைந்து கொண்டான் என்பதை விபரிக்கிறான்.
நன்றாகப் படிக்கும் பட்சத்தில் தன்னை விடுமுறையின் போது (ஐ.எஸ். தீவிரவாதிகளின்) இராணுவ முகாமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக தனது தந்தை தனக்கு வாக்குறுதியளித்திருந்ததாக அந்த சிறுவன் கூறுகிறான்.
'ஐ.எஸ். தீவிரவாதிகளால் இன்னொரு குழந்தை பிரசவிப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்சியின் ஆரம்பத்தில் அந்த சிறுவன் சிறிய தோட்டமொன்றைப் பராமரித்து அங்குள்ள தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை வெளிப்படுத்தும் காட்சி காண்பிக்கப் படுகிறது.
தனது தந்தை மோதல் ஒன்றில் இறப்பதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட இராணுவ முகாமுக்கு தன்னை அழைத்து வந்து, 'நீ இவ்வாறு தாவரங்களை நட்டு பராமரித்த பின்னர் பொறுமையாக இருக்க வேண்டும். அதேசமயம் மத சட்டத்தைக் கற்று கடவுளுக்கு பயபக்தியாக இருக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்ததாக சலாதீன் கூறினான்.
'நான் நாஸ்திகர்களுக்கு கூறும் செய்தி என்னவென்றால், நான் கொடுங்கோலர்களுக்காக பணியாற்றும் ஆட்களை தடுத்து நிறுத்தி இறைவனுக்கு பணி செய்வதற்காக ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்லாமிய தேசத்துக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளேன்" என அவன் தெரிவித்தான்.
“இறைவனுக்கு அப்பால் யாரும் இல்லை. நாம் மதத்துக்கு மட்டுமே ஆதரவளிக்கி றோம். நாங்கள் இஸ்லாமிய தேசத்தின் குழந் தைகள். நாங்கள் அனைத்து இஸ்லாமிய நிலங்களிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை" என சலாதீன் சூளுரைக்கிறான்.
தொடர்ந்து அவன் சிறிய அறையொன்றின் மூலையில் அச்சத்துடன் நின்று கொண்டிருந்த நபரொ ருவரை நோக்கிச் சென்று அவரது தலையில் துப்பாக்கியால் சுடுகிறான்.
அதன் பின் அந்நபர் தரையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்